ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: இன்றும் விலை உயர்வு….வாகன ஓட்டிகள் ஷாக்..!!

Author: Aarthi Sivakumar
24 June 2021, 8:10 am
Petrol Diesel- Updatenews360
Quick Share

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வந்தது. அதிகரிக்கும் விலையால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் சூழல் உருவானது.

பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.98.88ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 6 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.92.89 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Views: - 206

0

0