ரூ.97ஐ கடந்த பெட்ரோல் விலை…டீசல் விலையும் உயர்வு: இன்றைய நிலவரம்..!!

11 June 2021, 7:55 am
Never make these mistakes at the petrol pump
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.

petrol price - updatenews360

இதன் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது. நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.94 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.19 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 91.42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Views: - 127

0

0