பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருக்கா?: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்!!

Author: Rajesh
2 January 2022, 8:16 am
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் 59வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சென்னையில் கடந்த 58 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 59வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40க்கும், டீசல் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை ஒரே சீராக ஏற்றம் அடையாமல் உள்ளது வாகன ஓட்டிகள் இடையே ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 825

0

0