பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : பிரியாணி கொடுக்க முடியாது என கூறியதால் ரவுடி ஆத்திரம்!!

19 April 2021, 6:19 pm
Biriyani Shop Petrol -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : ‌திருமழிசை பகுதியில் பிரியாணி கேட்டு தராத ஆத்திரத்தில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருபவர் அருணாச்சலம் (வயது 40). இவரது கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரியாணி கேட்டுள்ளனர்.

இருவருக்கு கடை உரிமையாளர் அருணாச்சலம் பிரியாணி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எபிநேசர் உள்ளிட்ட மூன்று‌ பேர்‌ சிறிது நேரத்தில் அவரது கடைக்கு முன் இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து துாக்கி எறிந்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் கடைக்கு அருகே இருந்த அவரது வீட்டின் மீதும் பாட்டிலை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் எந்த வித பாதிப்பும் இல்லை.

இதுகுறித்து அருணாச்லம் கொடுத்த புகாரின் பேரில் திருமழிசை உடையார்கோவில் காலனியைச் சேர்ந்த எபிநேசன்‌ மற்றும் அவரது நண்பர்கள் உட்பட மூவர் மீது வெள்ளவேடு போலீசார் வழக்கு பதி்நது விசாரித்து வருகின்றனர்.

மூன்று பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். எபிநேசன் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 146

0

0