இப்டியே போனா அவ்ளோதான்…மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் ஷாக்..!!

18 May 2021, 7:58 am
petrol price - updatenews360
Quick Share

சென்னை: கடந்த சில நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.

இதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்து வந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 94.31 ரூபாய், டீசல் லிட்டர் 88.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் 23 காசுகள் அதிகரித்து லிட்டர் 94.54 ரூபாயாகவும், டீசல் 27 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப் படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Views: - 111

0

0