கோவில்களை தயவு செஞ்சு திறங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2021, 4:13 pm
Temple Suicide - Updatenews360
Quick Share

கோவை : ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சானி பவுடர் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுபாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண்மணி ஒருவர் கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவிலை திறக்க வலியுறுத்தி திடீரென சானி பவுடர் குடிக்க முயன்றார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்தி நிறுத்தினர். அப்போது கோவிலை திறக்க வேண்டும் என்றும் இல்லையெனில் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் ஆவேசமடைந்தார்.

பின் போலீஸார் காலில் விழுந்து அழுதார். அவரை சமாதான படுத்திய போலீசார் அவரை அழைத்து சென்று விசாரிக்கையில் அவர் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன் தண்டுமாரியம்மன் கோவிலுக்கு முன் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

அதனை அவர் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Views: - 551

0

0