பிளஸ்-2 மாணவி பூச்சி மருந்து குடித்து விடுதியில் தற்கொலை : பெண் விடுதி காப்பாளரின் தொந்தரவால் விபரீத முடிவு

Author: Babu Lakshmanan
20 January 2022, 9:04 am
Quick Share

அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி மாணவி விடுதியில் பூச்சி மருந்தை குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் முருகானந்தம் (45). இவரது முதல் மனைவி கனிமொழியின் மகள் ஸ்வேதா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 8 வகுப்பு சேர்த்து தற்போது பிளஸ் 2  படித்து வந்தார். அவர் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

 இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மறுதினம் 10ம் தேதி மாணவியின் தந்தைக்கு தெரியப்படுத்தியதால்  அவர் வந்து மாணவியை அழைத்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை 15ஆம் தேதி தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் .அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி தான் பூச்சிமருந்து குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து பைல்களையும் பார்க்கச் சொன்னதாகவும், தான் பிளஸ் டூ படிப்பதால் தன்னால் படிக்க முடியவில்லை என்ற காரணத்தினால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரி ( 62) கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

இந்நிலையில் அந்த மாணவி நேற்று 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அப்பள்ளி மற்றும் விடுதி  மற்றும் ஆகியவற்றிற்கு செல்லும் வழிகள் அனைத்திலும் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டு  திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . அந்த மாணவி இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Views: - 273

2

0