கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பலனில்லை : அதிமுகவில் இணைந்த பாமக மாநில துணைத் தலைவர் வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2021, 6:29 pm
Pmk Leader join Admk - Updatenews360
Quick Share

விழுப்புரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏழுமலை தலைமையில் பாமகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 100 பேர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பாமகவில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொறுப்பில் வகித்த ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் மலர்சேகர், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் இளங்கோ, முன்னாள் நகர செயலாளர் வடபழனி Ex.MC மாநில பொதுக்குழு உறுப்பினர் கேபி ரங்கநாதன், மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் சம்பத், மாநில விவசாய சங்க செயலாளர் அன்பு, வழக்கறிஞர் அணி உட்பட பாமக நிர்வாகிகள் 100 பேர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் விழுப்புரம் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் அதிமுக வில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏழுமலை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அய்யாவில் ஈர்க்கப்பட்டு பாமகவில் இருந்தோம். மாவட்டம் முதல் மாநிலம் வரை பல பொறுப்புகளில் இருந்தோம்.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் வரும் போதெல்லாம், தனித்து போட்டி என்ற முடிவை பாமக எடுக்கிறது.

இதனால் கட்சியிலுள்ள எங்களுக்கு மதிப்பில்லை. உழைத்தவர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. இதனால் நாங்கள் அதிருப்தியில் இருந்தோம். அதன் அடிப்படையிலேயே தற்போது பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளோம்.

திண்டிவனத்தில் உள்ள நாங்களே தற்போது அக்கட்சியிலிருந்து விலகி உள்ளதால் மேலும் பலர் விலகுவார் எனவும் தெரிவித்தார்.

Views: - 141

0

0