“இரண்டு கோல் அடிக்கும் பாஜக கூட்டணி, காணாமல் போகும் திமுக – காங்கிரஸ்“ : பொன்.ராதா பொளேர்!!

19 January 2021, 11:39 am
Pon Radha - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பாஜக கூட்டணி இரு கோல் அடிக்க உள்ளது அது அடிக்கும் போது திமுக காங்கிரஸ் ன் அத்தியாயம் இருக்காது, என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜகவினர் பூத் பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, குமரிக்கு வருகை தந்துள்ள கனி மொழியை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு நெருக்கமான சகோதரி என்ற முறையிலும் வரவேற்கிறேன்,அதே நேரத்தில் இவர் வருகை குமரிக்கு கேடு விளைவிக்கும் முயற்சியாக தான் இருக்கும்,

திமுக வினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இல்லை. அவர்கள் இரண்டு பேரையும் ஏமாற்றுகிறார்கள், கடவுள் நம்பிக்கை இல்லை என பக்தர்களையும், நார்த்திகவாதி என கூறி நார்த்திக வாதிகளை ஏமாற்றுகின்றனர். திமுக வில் இந்துக்கள் அதிகம் உள்ளனர்.

இன்னும் வேகமாக வளர்ந்து வந்தால் சிறுபான்மையினரை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் கூட திமுகவிடம் இருந்து வந்தால் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. சசிகலா குறித்து பேச்சு குறித்து குரு மூர்த்தி விளக்கம் கொடுத்து விட்டார் ,விளக்கம் கொடுத்த பிறகு அது குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்று கூறிய பொன்.ராதா சசிகலவை வரவேற்கிறோம், அவர்கள் இல்லாமல் நான்கு ஆண்டு அரசியல் மறைந்து போகும் நிலையில் அவர்கள் வருகிறார்கள் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என தெரியவில்லை என கூறினார்.

சசிகலா அதிமுக கூட இணைவது குறித்து அதிமுக தான் முடிவெடுக்க வேண்டும், கருத்து கூற பாஜகவுக்கு தேவையும் எழவில்லை, நாங்கள் அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருந்து வருகிறோம்.

ஜல்லிக்கட்டை பார்க்க வந்த ராகுல்காந்தி வந்த நாள் தமிழர்களின் இருண்ட நாளாக கருதுகிறேன்,வரவேற்க பட வேண்டிய ஒன்று அல்ல, கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் கூறியது உண்மையாகிறது, அது தமிழ் நாட்டிற்கு கேடு,இப்போ திமுகவிற்கு கேடு என்று விமர்சித்தார்.

மேலும் பாஜக கூட்டணி இரு கோல் அடிக்க உள்ளது அது அடிக்கும் போது திமுக – காங்கிரசின் அத்தியாயம் இருக்காத. அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழு பறி இல்லை, பறிக்க ஒண்ணும் இல்லை இழுக்கும் முயற்சி நடக்கும் எனவும் அவர் பேசினார்.

Views: - 6

0

0