‘வெளிமார்க்கெட்டில் வாங்கியாவது நிதி கொடுங்க’ : பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம்..!
2 September 2020, 7:12 pmவெளி மார்க்கெட்டில் கடன்பெற்றாவது மாநிங்களுக்கு நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதால், மாநிலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையையும் மத்திய அரசு விடுவிக்காததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைளை திறம்பட செய்வதில் மாநில அரசுகளுக்கு தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ரிசர்வ் வங்கி அல்லது வெளி மார்க்கெட்டில் கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்
0
0