ஆயுதபூஜை எதிரொலி ; கதம்ப பூக்களுக்கு எகிறய மவுசு.. கிடுகிடுவென விலை உயர்ந்த அரளி பூ!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 1:32 pm
Quick Share

திண்டுக்கல் ; ஆயுதபூஜையை ஒட்டி பூக்களின் விலை அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கதம்பமாலை கட்டுவதற்கு பயன்படும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கதம்பமாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

கடந்த காலங்களில் ஒரு பை ரூபாய் 50க்கு விற்பனையான அரளி பூ, அதிகபட்ச விலையாக ரூபாய் 400 முதல் 450 வரை விற்பனையானது.

அதேபோல் செண்டுமல்லி ரூபாய் 100 க்கும், கோழிக்கொண்டை பூ ரூபாய் 130க்கும், செவ்வந்திப்பூ ரூபாய் 350க்கும், வாடாமல்லி ரூபாய் 100க்கும், துளசி ரூபாய் 60க்கும், பன்னீர் ரோஸ் ரூபாய் 300க்கும், பட்டன் ரோஸ் ரூபாய் 300க்கும்,செண்டு மல்லி 150க்கும், சம்பங்கி பூ 320க்கும் விற்பனையாகின.

கடந்த காலங்களில் அரளி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களுக்கு விலை கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த ஆயுத பூஜை விழா பூ விற்பனை தங்களுக்கு ஒருநாள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Views: - 420

0

0