பள்ளி மாணவிகளின் ஆன்லைன் வாட்சப் குழுவில் வந்த ஆபாச படங்கள் : ஒரே ஒரு நம்பர்… சிக்கிய காமுகன்!!

4 July 2021, 7:10 pm
Porn Photos Arrest - Updatenews360
Quick Share

திருவாரூர் : தனியர் பள்ளியில் மாணவிகளுக்கான ஆன்லைன் வாட்சப் குழுவில் ஆபாச படம் அனுப்பிய காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவிகளுக்கென தனி வாட்சப் குழு உள்ளது. ஆசிரியர்கள் அந்த குழுவில் ஆன்லைனில் எடுக்கும் பாடம் சம்பந்தமாக அந்த குழு தொடங்கப்பட்டது.

அந்த குழுவில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் பெயரில் இருந்த எண்ணில் இருந்து ஆபாச படங்கள் வந்துள்ளது. உடனடியாக அந்த குழுவில் இருந்த ஆசிரியர்கள், ஆபாச புகைப்படம், வீடியோக்கள் வந்த எண்ணை நீக்கினர்.

மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மோகன்குமார் என்ற நபருக்கு தனியார் பள்ளியில் இருந்து மாணவி ஒருவருக்கு அனுப்பப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் தவறுதலாக ஒரே ஒரு எண் மாறி வந்துள்ளது.

இதை சாதகமாக்கிய காமுகன், அந்த மாணவி பெயரிலேயே குழுவிலும் இணைந்து இந்த அசிங்கமான வேலையை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Views: - 164

0

0