ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு : நாளை மீண்டும் தொடக்கம்!!

29 November 2020, 3:41 pm
counciling- Updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவ கல்நதாய்வு கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் நிவர் புயல் தாக்கத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது.

நவம்பர் 29ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் நாளை தொடங்கும் மருத்துவ கலந்தாயவு வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0