தயாரிப்பாளர் சங்க முக்கிய நிர்வாகிகள் மூன்று பேர் பதவி வகிக்க தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு!!

18 April 2021, 12:19 pm
HC -Updatenews360
Quick Share

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக பதவி வகிக்க 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று, அதில் ஆர்.ராதாகிருஷ்ணன் கவுரவ செயலாளராகவும், பொருளாளராக எஸ். சந்திரபிரகாஷ், துணைத்தலைவராக எஸ்.கதிரேசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், 5 ஆண்டுகளாக நேரடியாக தமிழ் திரைப்படங்கள் தயாரிக்காத மூன்று பேரை பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் கே.ராஜன் உட்பட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் பதவி வகிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

Views: - 35

0

0