‘Matrimony‘ ஆக மாறிய ‘PUBG‘ : குமரிப் பெண்ணை கரம் பிடித்த பப்ஜி வீரர்!!

24 September 2020, 10:52 am
PUBG Love- updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ‘பப்ஜி ‘ விளையாட்டு காதலாக மாறி திருவாரூர் இளைஞனுடன் காவல்நிலையத்தில் குமரிப் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் காதல், டிக்டாக் காதல் என காலத்திற்கேற்றாற்போல் காதலும் மாற துவங்கியுள்ளது. அதலினும் ஒருபடிமேல் சென்று தற்போது குமரியில் பப்ஜி விளையாட்டு மூலம் காதலில் இணைந்துள்ளனர் இளம் காதல் ஜோடியினர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்தவர் சசிகுமார் மரவியாபாரியான இவரது இரண்டு பெண்குழந்தைகளில் இளைய மகளாக 20வயதான பபிஷா என்பவர் திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றார்.

கல்வியை இடையிலேயே விட்டுவிட்ட பபிதா, தொடர்ந்து மொபைல் போனில் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்டார். மணிகணக்கில் பப்ஜியில் விளையாடி கொண்டிருந்தார் ,பெற்றோரும் மகள் ஏதோ விளையாட்டில் தான் ஆர்வமாக இருக்கிறார் என்ற எண்ணத்தில் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் விளையாட்டோ காதலாக மாறியது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகனான 24வயதான அஜின் பிரின்ஸ் என்பவருடன் பப்ஜி துணையுடன் காதலாக மாற துங்கியது

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய பபிஷா சாலையோரம் நின்றிருந்த காரில் ஏறினார். காரில் காத்திருந்த அஜின் பிரின்ஸுடன் தலைமறைவானார். தனது மகளை காணவில்லை என சசிகுமார் திருவட்டார் காவல்நிலையத்தால் புகார் அளித்தனர்.

புகார் குறித்த வழக்குபதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் காதல் ஜோடிகளை தேடி வலையை வீச துவங்கினர் காவல்துறையினர் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் 22ஆம் தேதி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர், மகனின் காதலை அகற்றுவதில் குறிகோளாக இருந்தார். மேலும் அஜின் பிரின்ஸின் உறவினராக காவல்துறையில் மது விலக்கு பிரிவில் துணை கண்காணிப்பாளராக இருக்கும் ஒருவர் மூலம் பபிஷா குடும்பத்தினருக்கு மிரட்டலும் விடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் காதலர்களோ சேர்ந்து வாழ்வதிலேயே குறிக்கோளாக இருந்தனர். இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினரும் அவர்களை சேர்த்து அனுப்ப நினைத்தனர். இதையடுத்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலுள்ள ஆலயத்தில் மாலைமாற்றி திருமணமும் செய்து அஜின் பினிஸ் பபிஷா காதலர்கள் அஜினின் பெற்றோருடன் சென்றனர்.