பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் : நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தல்!!

3 October 2020, 6:47 pm
Nilgiri Collector Advice - updatenews360
Quick Share

நீலகிரி : மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தொற்று பரவலை தடுக்க முடியும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்டத்தில் தற்பொழுது வாரத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியே செல்லும் போது கட்டாயமாக பொதுமக்கள் முக கவசத்தை அணிய வேண்டும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே நோய் பரவலை தடுக்க முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்…

மேலும் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அனைத்து துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனரா என அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருவதோடு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளோருக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

எனவே அந்தந்த வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சமூகப் பொறுப்புடன் நோய் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும் என கூறினார்.

Views: - 30

0

0