அதிமுக எம்எல்ஏக்கள் “தர்ணா“ : புதுச்சேரி அரசின் அலட்சியத்திற்கு கண்டனம்!!
3 September 2020, 2:12 pmபுதுச்சேரி : கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு அலட்சியம் காட்டுவதாகவும், குறைந்த அளவிலான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலக வாயில் கதவை இழுத்து பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும் கொரோனா பரிசோதனை செய்வதில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என்றும் மேலும் கொலோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அலட்சியம் காட்சி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகின்றன. இதனிடையை சுகாதார துறையின் அலட்சிய போக்கினை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சுகாதார துறை இயக்குனர் அலுவலகத்தை இழுத்து பூட்டி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து சுகாதார துறை இயக்குனரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
0
0