50 சதவிகித அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: அரசு உத்தரவு…
Author: kavin kumar17 January 2022, 4:44 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனவரி 31ஆம் தேதி வரை 50 சதவிகித அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அரசு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. மூன்றே வாரங்லளில் பாதிப்பு எண்ணிக்கை மலையளவு உயர்ந்து நிற்கிறது. அபாயகரமான டெல்டாவும் அதை விட உக்கிரமாகப் பரவக்கூடிய ஒமைக்ரானும் ஒருசேர இணைந்து பரவி வருவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் மாநில அரசுகள் அரசு அலுவலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.மத்திய அரசு அலுவலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் பதிவு நடைமுறை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஜனவரி 31ஆம் தேதி வரை 50 சதவிகித அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அரசு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை 50 சதவிகித பேர் மட்டுமே பணிக்கு வர புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம், அரசு செயலர்கள், அரசுத்துறை செயலர்கள் 100 சதவிகித பணிக்கு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம். அரசுத் துறையின் கூட்டங்கள் அனைத்தும் காணொளியிலேயே நடத்தவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
0
0