அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!

Author: Aarthi
4 October 2020, 4:25 pm
Rainfall_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோரப் பகுதியில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 47

0

0