ராஜமலை நிலச்சரிவு : 55 தமிழர்கள் கதி என்ன?

8 August 2020, 2:12 pm
Kovilpatti Kerala Landslide - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால் 72 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சமடைவதால் உடல்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இம்மாவட்டம் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அச்சப்படுகிறது. அந்த குடியிருப்புகளில் இருந்த 72பேர் வரை மாயமாகி உள்ளனர். இதில் 178 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதி நகரை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்துள்ளனர். இதில் 55 பேர் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களின் கதி என்னவென்று தெரியமால், கயத்தாரில் உள்ள அவர்களது உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர். மீட்கப்பட்ட 18 உடல்களில் 10 பேர் இப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நெல்லை, தென்காசி மற்றும் சென்னை பகுதியை சேர்ந்த தொழிலாளர்களும் நிலைமையும் தெரியவில்லை.

அங்குள்ள தேயிலை தோட்ட சூப்பர்வைசர் மேகநாதன் என்பவரிடம் கேட்ட போது நிலச்சரிவு மட்டுமின்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தான் உயிரிழப்புக்கு காரணம் என்றும், 72 பேரும் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கேரளா மாநிலம் ராஜமலை பெட்டி முடி பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் சின்னான் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். உயிரிழந்த உறவினர்கள் உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும், மற்றவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு உரிய உதவிகளை தமிழக, கேரளா அரசு செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 30

0

0