அகழாய்வு பணிகளுக்காக முதன்முறையாக ரூ.5 கோடி ஒதுக்கீடு : தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2021, 11:25 am
சென்னை : தமிழக பட்ஜெட் தாக்கலில் முதன்முறையாக அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை சட்டப்பேரவையில் தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதன்முறையாக காகிதம் இல்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
நிலம் கையகப்படுத்தும் முறைகள் எளிமையாக்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்
மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு.
பாசன திட்டங்களுக்காக ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு.
மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு”
0
0