ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குமரி வருகை : விவேகானந்த கேந்திர செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க திட்டம்

22 July 2021, 11:03 am
rss_chief_mohan_bhagwat_updatenews360
Quick Share

கன்னியாகுமரி: விவேகானந்த கேந்திராவில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குமரி மாவட்டம் வருகை தருகின்றார் .

குமரி மாவட்டம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாகத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 27, 28ம் தேதி நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகின்ற 26ஆம் தேதி இரவு கன்னியாகுமரி வருகின்றார். அங்கு அவருக்கு கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து அங்கு தங்கும் மோகன் பகவத் 27, 28 ஆம் தேதி நடைபெறும் விவேகானந்த கேந்திர நிர்வாக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்தவர் 29-ந்தேதி தேதி காலையில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். இதற்காக குமரி மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் போலீசார் இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Views: - 181

0

0

Leave a Reply