சாத்தான்குளம் பென்னிக்சை தேடி கடைக்கும், வீட்டிற்கும் அலையும் ‘டாமி’ – மனிதர்களை மிஞ்சிய நாயின் பாசம்..!

11 September 2020, 11:53 am
Quick Share

சாத்தான் குளத்தில் இறந்த பென்னிக்சை தேடி அவர் வளர்த்த நாய் சுற்றி திரிவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு பனைகம்பு கடை, செல்போன் கடை நடத்தி வந்தனர்.

இந்த சூழலில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஊரடங்கை மீறி கடை நடத்தியதாக சாத்தான்குளம் போலீசார் ஜெயராஜ், பென்னிக்சை அழைத்து சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சூழலில், பென்னிக்ஸ் இறந்தது தெரியாமல் அவர் வளர்த்த நாய் டாமி, அவரை தேடி கடைக்கும், வீட்டிற்கும் என அலைந்து திரிந்து வருகிறது. பென்னிக்ஸின் கடையை உறவினர்கள் திறந்த நிலையில் பென்னிக்ஸ் வந்துவிட்டார் என நினைத்து நாய் டாமி கடைக்கு வெளியில் காத்திருக்கிறது. இதை பாரத்த அப்பகுதி மக்களின் மனம் நெகிழ்ச்சியில் கலங்கியுள்ளது. மனிதர்களின் பாசத்தை மிஞ்சிய ஐந்தறிவு நாயின் பாசத்தை கண்டு அனைவரும் வியப்படைந்துள்ளனர்.

Views: - 0

0

0