பாலியல் புகார்.. ஜாமீன் கிடைத்தும் வருத்தத்தில் சிவசங்கர் பாபா : நீதிமன்றம் உத்தரவில் அதிருப்தி!!
Author: Udayachandran RadhaKrishnan26 October 2021, 6:31 pm
சென்னை : கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவிற்கு 2 வது போக்சோ வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, தலைமறைவான சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
முதலில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாலியல் வழக்கில் கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
3 போக்சோ வழக்கில் இரண்டாவது வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
0
0