பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மேலாளருக்கு தர்மஅடி..!

Author: kavin kumar
25 October 2021, 10:15 pm
Quick Share

கோவை: காரமடை லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலாளருக்கு சரமாரி அடி,உதை விழுன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் காரமடையில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காரமடை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.இந்த பெட்ரோல் பங்கில் மேலாளராக செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியக்கூடிய பெண் ஊழியர் ஒருவருக்கு செல்வகுமார் தொலைபேசி வாயிலாக ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,தனது வீட்டிற்கு ஒரு நாள் வரும் படியும் அந்த பெண்ணை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலாளரின் இந்த ஆபாச பேச்சு குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெட்ரோல் பங்க் சென்று மேலாளரிடம் பாலியல் தொந்தரவு குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியதோடு மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இச்சம்பவம் அப்பெண்ணின் உறவினர்களால் படம்பிடிக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Views: - 348

0

0