சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் 15 நாட்கள் சிறை: ஜாமீனுக்கு மறுக்கும் நீதிமன்றம்…கூச்சலிட்ட ஆதரவாளர்கள்..!!

Author: Aarthi Sivakumar
3 September 2021, 6:17 pm
Quick Share

செங்கல்பட்டு: சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை விடுதலை செய்யக்கோரி பக்தர்கள் முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சிவசங்கர் பாபா. தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாமீன் கோரி அளிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 383

0

0