உணவை ருசிப்பார்க்க உணவகத்தில் புகுந்த பாம்பு : சாப்பிட வந்தவர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 12:33 pm
Snake Caught -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் தனியார் உணவகத்தில் புகுந்த பாம்பால் சாப்பிட வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடும்பன் குளம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் 7 அடி நீள சாரை பாம்பு புகுந்துள்ளது. இதைப்பார்த்த சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் கடை உரிமையாளர் பாம்பு பிடிக்கும் முகேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் முகேஷ் சுமார் ஒரு மணி நேரம் போராடி 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து ,வனத்துறையினரிடம் ஒப்படைத்தார் .

பின்னர் வனத்துறையினர் 7 அடி நீள சாரை பாம்பை அடர்ந்த வன பகுதியில் கொண்டு போய் விட்டனர். தனியார் உணவகத்தில் சாப்பிட வந்தவர் அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 210

0

0