“கொரோனாவை வென்று மீண்டு வந்தார் எஸ்.பி.பி” – வதந்தி என எஸ்.பி.பி சரண் மறுப்பு..!

24 August 2020, 12:33 pm
Quick Share

கொரோனா பாதிப்பில் இருந்து பாடகர் எஸ்.பி.பி மீண்டு வந்தார் என்று வெளியான தகவல் வதந்தி என அவரது மகன் எஸ்.பி.பி சரண் தகவல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உலல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், சில தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எஸ்.பி.பி உடல்நிலை முற்றிலுமாக குணமடைந்து விட்டது. அவருக்கு கொரோனா தொற்று முற்றிலுமாக சரி செய்யப்பட்டுள்ளது போன்ற செய்திகள் வெளியாகின.

இதற்கு அவரது மகன் எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தொற்றில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 29

0

0