தமிழகத்தில் மிக வேகமாக அதிகரிக்கும் கொரோனா: 25 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு..!!

6 May 2021, 8:57 pm
Corona_Care_centre_UpdateNews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் இன்று ஒரே நாளில் 24,898பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருவதால், ஒரே நாளில் 24 ஆயிரத்து 898 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் 24,871 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 27 பேர் என 24,898 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1,52,130 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 24,898 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 6,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 6,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 41 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 45 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 114 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 81 பேரும் உயிரிழந்தனர்.

கொரோனாவால் மேலும் 195 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 21,548 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 11,51,058 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,31,468 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 5ம் தேதி 128 சிறுவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 810 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,97,500 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 216

0

0