மாணவச் செல்வங்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்..!

12 September 2020, 2:32 pm
Quick Share

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவி ஜோதி துர்காவின் இழப்பு வேதனை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை மருத்து படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில், நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா என்ற மாணவி மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரது இழப்பு குறித்து தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவச் செல்வங்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அரியலூரைச் சேர்ந்த மாணவன் நீட் தேர்வின் மீதான அச்சத்தால் கடந்த வாரம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அப்போது பிரதமர் மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 0

0

0