மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஆய்வு : அமைச்சர் மா.சுப்ரமணியன் அரியலூரில் பேட்டி…

Author: kavin kumar
10 August 2021, 7:32 pm
Quick Share

அரியலூர்: நடப்பாண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் அரசு தலைமை‌ மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்‌ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ‌அவர் பேசுகையில்,”கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைப்பதற்க்கு தான் ஒன்றிய அரசு தரும் தடுப்பூசிகளை இருப்பு வைக்காமல் அந்தந்த மாவட்டத்திற்க்கு அனுப்படுகிறது. மேலும் 11 புதிய மருத்துவகல்லூரி மருத்துவமனைகள் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

மேலும் இதுவரை 7 கல்லூரிகளில் ஆய்வு நடைபெற்றுள்ளது என்றும், நாளை 2 கல்லூரிக்கு ஆய்வுக்கு வரவுள்ளதாக கூறினார். மேலும் ஆய்வுகள் முடிந்தவுடன் ஒன்றிய அரசு அறிவிக்கும் என‌ கூறினார். மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தவா இந்த வெள்ளை அறிக்கை என செய்தியாளர்கள் கேட்டபோது உயர்த்துவதற்க்கு இந்த வெள்ளை அறிக்கை விடவில்லை என்றும் அரசின் நிதி நிலையை மக்களுக்கு தெரியபடுத்தவே அறிவிக்கப்பட்டது என்று கூறினார். நேற்று வெள்ளை அறிக்கை இன்று முன்னால் அமைச்சர் வேலுமணி வீட்டில் வருமான வரிதுறை‌சோதனை இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என கேட்ட போது இல்லை என கூறினார்.

கொரோனா தொற்று பரவிவரும் சூழ்நிலையில் ஒன்றாம் தேதி பள்ளி திறக்கப்படும் என கூறுவது குறித்து கேட்டபோது உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்களை பார்த்து கேட்டார். மேலும் திறக்க வேண்டுமா‌, வேண்டாமா என பதில் கேள்வி கேட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன். இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் ரமணசரஸ்வதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 252

0

0