சுவரை ஓட்டை போட்டு நகைக்கடைகளில் கொள்ளை: போலீசார் விசாரணை

Author: kavin kumar
11 December 2021, 7:16 pm
Quick Share

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே இரண்டு நகைக்கடைகளில் சுவரினை ஓட்டைப் போட்டு கடையில் இருந்த சுமார் 20 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளியில் குமார் மற்றும் உம்ரா தேவி ஆகிய இருவர்களுக்கு சொந்தமான சிறிய அளவிலான நகைக்கடைகள் உள்ளது.இந்த கடைகள் மூலமாக சிறிய அளவிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் வைத்து விற்பனை செய்துவந்துள்ளனர். இவர்கள் வழக்கம்போல கடை பூட்டிவிட்டு சென்றவர்கள் காலையில் உம்ரா தேவி கடையை திறந்து உள்ளனர், அப்போது கடையின் பின்புற சுவரில் பெரிய அளவிலான ஓட்டைப் போட்டு கடையில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.இதேபோல குமார் என்பவரது நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து எறிந்ததோடு கடையில் இருந்த 5 பவுண் தங்க நகை மற்றும் 8 கிலோ வெள்ளிப் பெருள்களையும் கொள்ளையடித்துவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்த இரு கொள்ளை சம்பவம் குறித்து பர்கூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாகை கைரேக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடும்பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். இரு கடைகளின் சுவர்களை ஓட்டைப் போட்டு சுமார் 20 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 381

0

0