கோவையில் கார் குடோனில் திடீர் தீ : வானுயர கரும்புகை எழுந்ததால் மக்கள் அவதி..!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2021, 6:22 pm
Car Godown Fire -Updatenews360
Quick Share

கோவை : கோவை ராமநாதபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான கார் குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

கோவை, ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்குச் சொந்தமான கார் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் திடீரென குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் சுதாரிப்பதற்குள் தீ மளமள வென குடோன் முழுவதும் பரவியது.

இதனால் வானை முட்டும் அளவுக்கு வெளியேறி கரும்புகை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் ஆட்கொண்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இரண்டு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்றனர்.

குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனை அடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த திடீர் தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் சாம்பலாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 525

0

0