கோவையில் குற்றம் செய்த குற்றவாளிக்கு ஆதரவு : பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 October 2021, 4:05 pm
கோவை : குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் தீவிர குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கலையரசி என்பவர், இதற்கு முன் பொருளாதார குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளராக இருந்தார்.
அப்போது மோசடி நிறுவனங்கள் குறித்து புகார்கள் வந்த போது உடனடியாக விசாரிக்காமலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது உறுதியான நிலையில் காவல் ஆய்வாளர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டார்.
Views: - 428
0
0