கொரோனா பீதி – சிகிச்சையை நிறுத்திய சென்னையின் பிரபல மருத்துவமனை…!

26 March 2020, 8:16 pm
Tambaram Sidha updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை தாம்பரத்தில், இந்தியாவின் முதல் சித்த மருத்துவத்திற்க்கான ஆராய்ச்சி நிறுவனமாக இயங்கி வருகிறது, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

இங்கு, தரமான உயர்சிகிச்சை முற்றிலும் இலவசம். வெறும் 10  ரூபாயில் நுழைவு அட்டை, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டால், அதற்கு 50 ரூபாய் மட்டும் தான். இங்கு மருந்துகள் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.

தாம்பரம் சித்த மருத்துவமனையில் ஏறத்தாழ தினமும் 2000 இருந்து 3000 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளியாக 200 பேர் வரை நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை பெறும் வசதி உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுகிறது. மேலும் பலருக்கு பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு வரும் நோயாளிகளின் நலன் கருதி, தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிகமக நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, சாதாரண சிகிச்சை பெற சித்த மருத்துவமனைக்கு யாரும் வர வேண்டாமென்று தாம்பரம் சித்த மருத்துவமனையின் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply