சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு : விதிமுறைகள் என்ன..?

5 September 2020, 9:15 am
Quick Share

தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 4-ஆம் கட்ட தளர்வை மத்திய அரசு அறிவித்தது.

மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், மாநிலவாரியாக பல்வேறுகட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு வரும் 7-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதையடுத்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு 9 சிறப்பு ரயில்கள் எந்த நேரங்களில், எத்தனை நாட்கள் இயக்கப்படும், டிக்கெட் முன்பதிவு எப்போது நடைபெறும் என்று அறிவித்தது.

தொடர்ந்து, நேற்று, மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த ரயிலுக்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பலவேறு கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளுடன் ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், பயணிகள் செரும் இடத்தின் முகவரி கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0