தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

24 August 2020, 1:18 pm
Quick Share

தமிழகத்தில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இதேபோல், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 24, 25 வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 24 முதல் 28 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 25.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.3 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்

Views: - 25

0

0