‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

22 August 2020, 1:15 pm
Quick Share

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது

வேலூர், ரணிப்பட்டை, சேலம், தர்மபுரி, திருச்சி கரூர், புதுக்கோட்டை, மதுரை சிவகங்கை, விருதுநகர் திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 25 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும், 22 – 23ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 24 வரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 35

0

0