#Corona சரக்கு பாட்டில்களுக்கு வந்த மவுசு..! டாஸ்மாக் அதிரடி உத்தரவு

26 March 2020, 6:38 pm
tasmac-leave-udpatenews360
Quick Share

சென்னை: டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் திருடப்படக்கூடும் என்பதால் அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகளுக்காக காய்கறி கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

டாஸ்மாக், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன. வீடுகளுக்குள்ளேயே இருந்து நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க  வேண்டும் என்ற அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந் நிலையில் பொதுமக்கள் சிலர் அரசின் உத்தரவுகளை மீறி வருவது தொடர்கிறது. இது ஒரு பக்கம் இருக்க டாஸ்மாக் மூடப்பட்டிருப்பதால் சில இடங்களில் கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக தெரிய வந்துள்ளன.

எனவே தற்போது இருப்பில் வைக்கப்பட்டிருக்கும் மதுபாட்டில்களை பாதுகாக்க அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கில் இருக்கும் மதுபாட்டில்கள் திருட வாய்ப்புள்ளது.

எனவே அவற்றை பாதுகாப்பாக கிடங்கு அல்லது கல்யாண மண்டபங்களில் வைக்க டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கல்யாண மண்டபங்களில் வைக்கப்படும் மதுபாட்டில்களை பாதுகாக்க போலீசாரை நியமிக்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply