டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் தீக்குளிக்கு முயற்சி! போலீசார் குவிப்பு!!

25 August 2020, 1:40 pm
Tasmac Suicide Attempe - Updatenews360
Quick Share

ஈரோடு : டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஊழியர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா காலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு 50 லட்சம் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும், தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சுரேஷ் என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனையடுத்து தீக்குளிக்க முயற்சி செய்த நபரை அக்கம்பக்கத்தினர் தடுத்து நிறுத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீக்குளிக்க முயற்சி செய்த ஊழியர் சுரேஷை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Views: - 0

0

0