மதுவாங்க வந்தவரை தரக்குறைவாக பேசிய டாஸ்மாக் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் : ஆட்சியர் அதிரடி

3 July 2021, 10:40 am
tasmac - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: மதுவாங்க வந்த குடிமகனிடம் அநாகரிகமாக பேசிய மேற்பார்வையாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

நாகர்கோவிலை அடுத்த தெங்கம்புதூரில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது.இந்த கடையில் மதுவாங்கவந்தவருக்கும் விற்பனையாளர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த வீடியோவில் வாடிக்கையாளரிடம் மதுக்கு 5 ரூபாய் கூடுதலாக கேட்டதால் ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து டாஸ்மாக் மேலாளர் பால்துரை தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் மதுஇருப்பு தொடர்பாக குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மேற்பார்வையாளர் விஜயகிருஷ்னனுக்கு 6 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

வாடிக்கையாளரிடம் தகராறு செய்தவர் ஓய்வுபெற்ற ஊழியர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் வீடியோவை பார்த்த கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து மேற்பார்வையாளர் விஜயகிருஷ்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Views: - 232

0

0