திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ! துணிகள் எரிந்து சேதம்.!!

4 August 2020, 10:44 am
Tirupur Textile Factory- Updatenews360
Quick Share

திருப்பூர் : பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்திலிருந்த பின்னலாடை துணிகள் எரிந்து சேதம் !!

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன், இவர் தண்ணீர் பந்தல் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதனிடையே இன்று காலை ஏற்றுமதி நிறுவனத்தின் முதல் தளத்திலிருந்து, புகை வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பின்னலாடை துணிகள் மட்டும் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது., இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

Views: - 8

0

0