மாநாடு படம் பார்க்க வருபவர்களை கட்சியில் சேர்க்கும் நிர்வாகி : காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலை. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 9:42 pm
congress Theatre -Updatenews360
Quick Share

கோவை : இளைஞர் காங்கிரசில் இணையவழியில் உறுப்பினர்களை சேர்ப்பதர்க்காக புதுயுக்தியை கையாண்டு வரும் காங்கிரசாரின் செயல் நகைப்பையூட்டியுள்ளது.

கோவை சுந்தராபுரம் சாரதாமில் சாலையில் உள்ள அரசன் திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைப்படம் பார்க்கவரும் இளைஞர்களையும், இளம் பெண்களையும் காங்கிரசார் மறித்து உங்களின் ஆதார் கார்டு, அல்லது, ஓட்டுனர் உரிமம் மட்டும் கொடுங்கள் காங்கிரஸிற்கு ஒரு ஓட்டு மட்டும் போடுங்கள் டிககட் இலவசமாக தருகிறோம் என்று ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் ஒரு காங்கிரஸ் நிர்வாகி, எத்தனைபேர் இருந்தாலும் ஆதார் கார்டு எடுத்து வரச்சொல்லுங்கள் அனைவருக்கும் டிக்கட் இலவசமாக தருகிறோம் என்று தீவிரமாக பேசுகிறார்.

காங்கிரசாரின் இந்த இந்த காமடியை வேடிக்கை பார்ப்பதற்க்காகவே திரையரங்கிற்கு பலரும் வந்து செல்கிறார்கள். ஒருசிலர் ஆதர் கார்டு எடுத்து வருவதாககூறி வெளியே செல்வதையும் பார்க்கமுடிகிறது.

மொத்தத்தில் கட்சி தொண்டர்களை வைத்து மாநாடு நடத்திய காலம்போய், மாநாடு படம்பார்க்க வருபவர்களை கட்சியில் சேர்த்து கணக்கு காட்டவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசாரின் இந்த செயலை பலரும் நகைப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Views: - 319

0

0