ஹலோ கொஞ்ச நில்லுங்க : வயதான பெண்ணை பின்தொடர்ந்து வந்த கரடி!!

8 July 2021, 4:27 pm
Quick Share

நீலகிரி: குன்னூர் அருகே கேத்தி பகுதியில் வயதான பெண்னை பின் தொடர்ந்து வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சர்வசாதாரணமாக உலா வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குன்னூர் கேத்தி அருகே உள்ள முக்கட்டி கிராமத்தில் பகல்நேரத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த கரடி சாலையில் நடந்து சென்ற வயதான பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வயதான பெண் கரடியை திரும்பி பார்த்து ஓட முடியாமல் சென்றார். அந்த கரடி பின்னர் அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றது. இந்த பகுதியில் நாவல் விக்கி, பேரி பழங்களை தேடி கரடிகள் வர துவங்கி உள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதன் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கரடியை கண்காணித்து வருகின்றனர். இதனால் குன்னூர் அருகே அக்கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 107

0

0