ஸ்டாலின் பெயர் எழுதப்பட்டிருந்த சுவற்றில் கரி பூசிய திமுகவினர் : கன்னியாகுமரியில் பரபரப்பு!!

31 January 2021, 4:09 pm
Stalin - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களில் திமுகவை சார்ந்த ஒரு பிரிவினர் கரி ஆயில் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து குமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்கவிளை பேரூராட்சி க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சில கட்சி நிர்வாகிகள் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுத்தப்பட்டிருந்தன.

இந்த சுவர் விளம்பரங்களில் திமுகவை சேர்ந்த ஒரு பிரிவினர் கரி ஆயில் ஊற்றியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த செயலில் ஒரு பிரிவினர் ஈடுபட்டதாக கூறி திமுக திருவட்டார் ஒன்றிய துணை செயலாளர் கலை கிரி தலைமையில் களியக்காவிளை காவல் நிலையத்தில் திமுக மேல்புறம் ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் ஷாஜஹான், களியக்காவிளை பேரூர் செயலாளர் தோமஸ் சிங் உட்பட திமுகவை சேர்ந்த 10 பேர் மீது திமுக திருவட்டார் துணை செயலாளர் கலை கிரி களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து களியக்காவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கட்சியை சார்ந்த தலைவரின் பிறந்த நாள் சுவர் விளம்பரத்தில் அதே கட்சியினர் கரி ஆயில் பூசி அழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0