கோவை அருகே வீடு புகுந்து கத்தி முனையில் செல்போனை பறித்து சென்ற கும்பல் : சிசிடிவி காட்சி மூலம் 6 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 7:39 pm
Cell Phone Snatch Arrest - Updatenews360
Quick Share

கோவை : கருமத்தம்பட்டி அடுத்த வடுகன் காளிபாளையம் பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 6 இளைஞர்களை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்

கடந்த 22ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) என்பவர் நண்பர்களுடன் வடுகன் காளிபாளையத்தில் உள்ள வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு இளைஞர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி போலீசார் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் வடுகன்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் (வயது 22), மாலிக் பாஷா (வயது 20), இம்ரான்கான் (வயது 22) என்பதும் மேலும் இவர்களது நண்பர்களான கோவையை சேர்ந்த சாகர் (வயது 19), விக்ரம்பிரபு(வயது 21), பிரேம்குமார்(வயது 22) , ஆகியோர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு நபரான சக்திவேலை (வயது 23) போலீசார் தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 252

0

0