சிறுமியின் உடலை ஆற்றில் எடுத்துச் சென்ற பொதுமக்கள்… சுடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாததால் அவலம்…!!

Author: Udhayakumar Raman
4 December 2021, 5:50 pm
Quick Share

தருமபுரி: நல்லம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்த சிறுமியின் உடலை தண்ணீர் ஓடும் ஆற்றில் கொண்டும் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கம்பம்பட்டி கிராமம் சோளியனூர் அம்பேத்நகர் அருந்ததியர் காலணியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்தால் அவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் அங்குள்ள ஆற்றை கடந்து செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் போது தண்ணீரின் நடந்து சென்று உடலை கொண்டு அடக்கும் செய்யும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் 12 வயது சிறுமி செக்காரப்பட்டி அணையிலிருந்து வரும் பொன்னி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். தற்போது ஆற்றில் தண்ணீர் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் இறந்த சிறுமியின் உடலை தூக்கிகொண்டு ஆற்றை கடந்து அடக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 249

0

0