தாலிக் கட்டிய கையோடு மனைவியை மண்டபத்திற்கு வெளியே அழைத்து வந்த கணவன் : குவியும் பாராட்டு!!

23 January 2021, 11:12 am
New Married Couples - Updatenews360
Quick Share

வேலூர் : தாலிக் கட்டிய கையோடு தனது மனைவியை அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறிய கணவனின் செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டை சுற்று சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ரவி என்பவரின் மகன் திருமணம் வேலூர் செல்வ வினாயகர் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு புதுமணதம்பதிகள் வேதநாராயணன் மற்றும் பவ்யஞீ திருமண கோலத்துடன் வேலூர் கோட்டை சுற்றுசாலையில் உள்ள மின் வாரிய வாளகத்திற்கு வந்தனர்.

அங்கு மின்வாரிய மேற்பார்வையாளர் காமராஜ் ஏற்பாட்டில் அத்தி, மகிழம், கருங்காலி என மூன்று மர கன்றுகளை நட்டு சுற்றுசூழலை மக்கள் அனைவரும் பாதுகாக்க கட்டாயம் மரக்கன்றுகளை நட வேண்டுமென மக்களுக்கு நூதன முறையில் புதுமணத்தம்பதிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Views: - 5

0

0