கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக மாறிய குரங்கு.!

15 August 2020, 5:12 pm
Mtp Monkey - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே உள்ள கிராம மக்களிடம் அன்பை வெளிப்படுத்தி வரும் குரங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே குருந்தமலை கோவில் மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் இருந்து வந்தது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக குரங்குகளின் எண்ணிக்கை அப்பகுதியில் அதிகரித்து வருகிறது.

அங்கிருக்கும் குரங்குகள் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பழங்கள் மற்ற உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட்டு வந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக கோயில்கள் முழுவதும் பூட்டி இருப்பதனால் குரங்குகள் உணவு இல்லாமல் கிராமங்களை நோக்கி சென்றுள்ளன.

அதேபோல் ஒரு குரங்கு அருகில் உள்ள கிராம பகுதியான புங்கம்பாளையம் கிராம பகுதிக்கு வந்துள்ளது. அந்த குரங்குக்கு அப்பகுதி மக்கள் வாழைப்பழம் மற்றும் பழங்களைக் கொடுத்து வந்தனர். இதனையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் இடம் நெருங்கி பழகி வருகிறது.

அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கல்லின் மீது யாராவது அமர்ந்துவிட்டால், அந்த குரங்கு அவர்களிடம் கொஞ்சி விளையாடி வருகிறது. பின்னர் அவர்கள் தலையில் ஏறி அமர்ந்து கொண்டு பேன் எடுப்பது மற்றும் இதர சுட்டி வேலைகளை செய்து பழகி வருகிவது அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 32

0

0