‘அத பத்தி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை‘ : எல்.முருகன் கடும் விமர்சனம்!!

21 September 2020, 12:10 pm
Villupuram Murugan- updatenews360
Quick Share

விழுப்பரம் : மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை மக்களிடம் திரித்து கூறுவதே ஸ்டாலினின் வேலை என தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் தனியார் மஹாலில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் மாநில OBC அணி தலைவர் திரு J.லோகநாதன் முன்னிலையில் நடைபெற்றது..

செயற்குழு கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் முருகன்: மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும், நல்லது செய்தாலும் தமிழக மக்களுக்கு திரித்து கூறுவதும், அரசியலாக்குவது தான் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் வேலை என கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின் ஒரு விவாசாயே இல்லை, அவருக்கு விவசாயம் என்ன என்பதும் விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத அவர் இச்சட்ட மசோதா குறித்து பேச அருகதையே இல்லை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் ரஜினி கட்சி ஆரம்பித்தால் வரவேற்போம் எனவும் யார் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் அரவணைப்போம் தற்போது வரை என்.டி.ஏ கூட்டணியே தொடர்கிறது என கூறினார். மேலும் அதிமுகவில் ஓ.பி.எஸ்.க்கும், இ.பி.எஸ்க்கும் இடையே விரிசல் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்த அவர் பெரியாரின் நல்ல கொள்கையை யார் கூறினாலும் ஏற்றுக்கொள்வோம் ஆனால் கடவுள் இல்லை என்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0